ராயன் படத்தில் உறவினருக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்துள்ளார் தனுஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இயக்குனராக மாஸ் காட்டியவர் தனுஷ். இவர் இயக்கி நடித்த படம் ராயன். இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் தூள் கிளப்பியது.
இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுருளி, ஜெயராம் காளிதாஸ், சந்தீப் கிஷன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் தன் சகோதரி கார்த்திகா கணவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது தனுஷின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.