ராயன் படத்தின் எட்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவராக இருந்து வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும், நடிப்பிலும் , சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் வெளியான படம் ராயன். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தது.
மேலும் செல்வராகவன், துஷாரா விஜயன், சந்திப் கிஷன், அபர்ணா பால முரளி, எஸ் ஜே சூர்யா, மற்றும் காளிதாஸ் ஜெயராம் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே 100 கோடியை தாண்டிய நிலையில் தொடர்ந்து வசூலில் மாஸ் காட்டி வரும் ராயன் படத்தின் எட்டு நாள்களில் 107 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.