
ராவணக்கோட்டம் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன்.
இந்த படத்தை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் ராவண கோட்டம்.

படத்தின் கதைக்களம் :
ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அங்கு மேல தெரு, கீழ் தெரு என இரண்டு பகுதிகள் இருக்க இரண்டு பகுதி மக்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வருகின்றனர். இருதரப்பு தலைவர்களாக இருக்கும் பிரபு, இளவரசன் ஆகியோர் நட்புக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சி இவர்கள் இருவருக்கும் இடையே கலவரத்தை மூட்டி விட சாந்தனு, கயல் ஆனந்தியின் காதலை கையில் எடுக்கிறது. அதே சமயம் தண்ணீர் பஞ்சத்திற்கு மூல காரணமான கருவேல மரங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் வேலையில் இறங்கிய பிரபு, இளவரசன் கொல்லப்படுகின்றனர்.
இதனால் இந்த இரண்டு பகுதி மக்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தால் நடந்தது என்ன? இந்த கலவரம் கட்டிக் கொள்வரப்பட்டதா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை அழகான கோர்வையாக கொண்டு சென்றுள்ளார்.

படத்தில் நடித்துள்ள சாந்தனு, கயல் ஆனந்தி உள்ளிட்டோரின் கதாபாத்திரம் மிகப்பெரிய பலமாக உள்ளது. அதேபோல் பிரபு இளவரசன் என இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.