Raatchasi Review : Plus and Minus of Jyothika's Raatchasi.! | Kollywood Cinema News | Kalakkal Cinema Review |Raatchasi Movie Review
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் படமாக உருவாகியுள்ள ராட்சசி பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Raatchasi Review : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான எஸ் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் ராட்சசி.

படத்தின் கதைக்களம் :

பல வேலைகள் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியையாக வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கும் ஜோதிகா அவருடைய ஆசையின் படியே ஆசிரியையாகிறார். ஆனால் அவருக்கு போஸ்டிங் கிடைக்கும் பள்ளியில் எவ்வித விதிமுறையையும் பின்பற்றுவதும் இல்லை. சுருக்கமாக சொன்ன போனால் எதுவுமே சரியில்லை.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகாவுக்கு அதே பள்ளி குள்ளாகவே சில எதிர்ப்புகளும் உள்ளன. இவை அனைத்தையும் ஜோதிகா எப்படி சரி செய்கிறார்? எப்படி அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்துகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜோதிகா மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக ஜோதிகாவின் முகத்தில் சிரிப்பை காண்பது மிக மிக அரிதான ஒன்று. படம் முழுவதிலும் நீளமான டைலாக்களால், அட்வைஸ் என ஸ்கோர் செய்கிறார், அப்படியிருந்தும் ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவில்லை.

தொழில் நுட்பம் :

இசை :

ஷான் ரோல்டனின் பின்னணி இசை இப்படத்தின் கூடுதல் பலம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் :

கோகுல் பெனோனியின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் எடிட்டிங் அற்புதம்.

தம்ப்ஸ் அப் :

1. ஜோதிகாவின் நடிப்பு
2. இசை
3. திரைக்கதை
4. படத்தின் கருத்து

தம்ப்ஸ் டவுன் :

குறை என சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை.

மொத்தத்தில் ராட்சசி ஆசிரியர்களும் பள்ளி குழந்தைகளும் பார்த்து பாராட்ட வேண்டிய படம்.

REVIEW OVERVIEW
ராட்சசி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
raatchasi-reviewமொத்தத்தில் ராட்சசி ஆசிரியர்களும் பள்ளி குழந்தைகளும் பார்த்து பாராட்ட வேண்டிய படம்.