தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க ஆசை என விஜய் சேதுபதி பட நடிகை ஓபன் ஆக பேசியுள்ளார்.

Raashi Khanna About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாப்பிள்ளை என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகிறது தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். தளபதி விஜய் தன மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

திரையுலகப் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் உண்டு.

தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க ஆசை - ஓபனாக பேசிய விஜய் சேதுபதி பட ஹீரோயின்.!!

அந்த வகையில் தற்போது தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக இமைக்காநொடிகள் படத்தில் நடித்து அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத் தமிழன் என்ற படத்தில் நடித்த ராசி கண்ணா அளித்த பேட்டியில் தமிழில் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.