Rana & Trisha

Rana & Trisha : த்ரிஷாவுடன் காதல் டேட்டிங் எல்லாம் உண்மை தான் என ராணா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்படியிருந்தும் இருவரும் சேராதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் பிரபல நடிகையான த்ரிஷாவுடன் காதலில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் டேட்டிங் எல்லாம் சென்று வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.

அப்படியான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் தங்களது காதலை பிரேக் அப் செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் ராணா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது த்ரிஷாவுடன் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது த்ரிஷாவுடன் காதலில் இருந்தது, அவருடன் டேட்டிங் சென்றது எல்லாம் உண்மை தான். ஆனால் அவரிடம் ஒரு சில விசயங்கள் செட்டாகவில்லை. அதான் பிரிந்து விட்டோம் என கூறியுள்ளார்.