R Kannan in Upcoming Movies

வெற்றி இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த படம் பற்றிய மாஸான அப்டேட் தெரிய வந்துள்ளது.

R Kannan in Upcoming Movies : தமிழ் சினிமாவில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன்.

‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்.

மேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப குழுவினர் விபரம்

தயாரிப்பு & இயக்கம் : R கண்ணன்

ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியெம்

வசனம் : சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார்.

படத்தொகுப்பு : லியோ ஜான் பால்

கலை இயக்கம் : ராஜ்குமார்

உடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்

புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்

மக்கள் தொடர்பு : ஜான்சன்