Indian 2
இந்தியன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகரான ஆர்.ஜே பாலாஜி விலகி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஆர். ஜே பாலாஜியும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் அவர் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருப்பதால் இந்த படத்தின் கால்ஷீட் கொடுத்திருப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதால் படத்தில் இருந்து விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆர். ஜே பாலாஜிக்கு பதிலாக சதிஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.