Indian 2

R.J Balaji : தொடர்ந்து ஒவ்வொரு பிரபலங்களாக இந்தியன் 2 படத்தில் இணைந்து வந்த நிலையில் தற்போது ஆர்.ஜே பாலாஜியும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்புவானான கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைபடத்தில் நடித்து வருகிறார்.

இதுவே கமல்ஹாசனின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்க எதிர்பார்ப்பை எட்டியுள்ளது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, சித்தார்த், டெல்லி கணேஷ் என பலர் இப்படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகராக ஆர்.ஜே பாலாஜியும் இணைந்துள்ளார்.

நெடுமுடி வேணு முதல் பாகத்தில் சேனாதிபதியை பிடிக்கும் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது இந்த பாகத்தில் அவர் அதே கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு உதவியாளராக நடிக்க ஆர்.ஜே பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள LKG திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.