பொன்னியன் செல்வன் திரைப்படத்திற்காக நடந்து வரும் ப்ரோமோஷன் பணியில் பயங்கரமாக வைரல் ஆகி வரும் த்ரிஷாவின் புகைப்படங்கள் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ப்ரோமோஷன் பணி யாருக்கு?? பொன்னியன் செல்வனுக்கா, த்ரிஷாவுக்கா - நெட்டிசன்களின் கேள்வி வைரல்!.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ப்ரோமோஷன் பணி யாருக்கு?? பொன்னியன் செல்வனுக்கா, த்ரிஷாவுக்கா - நெட்டிசன்களின் கேள்வி வைரல்!.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக படக்குழு ஊர் ஊராக பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இப்படத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் ஒவ்வொரு பிரமோஷனிலும் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது திரிஷாவின் புகைப்படங்கள் தான். இதனால் நெட்டிசன்கள் “நீங்கள் பொன்னியின் செல்வன் படத்திற்கு ப்ரோமோஷன் பண்றீங்களா? இல்ல திரிஷாவுக்கு ப்ரோமோஷன் பண்றீங்களா?” என்று கேள்வி எழுப்பி கிண்டல் அடித்து வருகின்றனர்.