PV Sindhu about MeToo
PV Sindhu about MeToo

PV Sindhu about MeToo – இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக மாறிவிட்ட நிலையில் அதை ஒழிப்பதற்குகாக பல வழிகளில் பெண்கள் துணிந்துள்ளனர். அந்த துணிச்சலின் ஒரு அங்கமாக திகழ்வதுதான் “மீடு”.

அண்மையில் எழுந்த ந்த “மீடூ” பிரசாரம் ஆண்களை பயத்துடன் நடந்து கொள்ளவும் பெண்கள் தங்களுக்கு நேரும் வன்கொடுமைகளை வெளியில் தைரியமாக சொல்லவும் வழி வகுத்துள்ளது.

இந்தியாவில் பெண்களை மதிப்பவர்கள் குறித்து எண்ணிக்கை அரிதாக இருக்கிறது என்றும் “மீடூ” பிரச்சாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என்றும் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தூள்ளார்.

‘பாலியல் வன்கொடுமைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்,

பி.சி.சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது அவர் தனது கருத்தை கூறினார்.

சிந்து கூறியது : நாம் பெண்களை மதிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் மக்கள் தெரிவிப்பார்கள்.

ஆனால், உண்மையில் அந்த கருத்தை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகதான் உள்ளது.

பாலியல் வன்கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்றே கருத வேண்டும்.

பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து “மீடூ” இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமூக பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

வெளிநாடுகளில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த நாடுகளில் பெண்களுக்கு உரிய மரியாதையும் அவர்களுக்கான தனிப்பட்ட உரிமைகளும் அளிக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.

இந்தியாவின் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here