131 இடங்களில் அதிமுக வெற்றி, புது யுகம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு.!

WATCH FULL VIDEO : Puthuyugam TV Poll Results DMK vs AIADMK

சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று புதுயுகம் டிவி கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குசாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிமுகவிற்கு பக்க பலமாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5% வாக்குகளை பெறும் என்றும் திமுக 38.5% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் poraளது. சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணி 39% வாக்குகளை பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45% வாக்குகள் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்ட்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும் என்றும் திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

Women's and Former Votes to AIADMK

மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்று புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம் திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.