PuthuPuthu Arthangal Serial Promo

சின்னத்திரையில் தேவயானி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள புதிய சீரியல் ப்ரோமோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

PuthuPuthu Arthangal Serial Promo : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவையானி. இவர் அஜித், விஜய், சூர்யா, கமல், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சின்னத்திரையில் கோலங்கள் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது தேவயானி மீண்டும் புதிய சீரியல் மூலமாக சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் இவர் நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதோ பாருங்க