Puthupetttai 2 Movie Producer Update

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Puthupetttai 2 Movie Producer Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புதுப்பேட்டை.

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை செல்வராகவன் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டு இருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது படத்தின் வேலைகளைத் தொடங்கி இருப்பது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் செல்வராகவனுடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக பதிவு ஒன்றை பதிவிட்டு புதுப்பேட்டை 2 படத்தை தயாரிப்பது நான்தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

செல்வராகவன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என இருவருமே இது என்ன படம் என்பதை தெரிவிக்கவில்லை. நிச்சயம் இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த பதிவு