Pushpa Movie Review

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம் வாங்க.

Pushpa Movie Review : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் புஷ்பா. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

Pushpa Public Review | Allu Arjun | Rashmika Mandanna | Samantha | Pushpa FDFS Review | Tamil | HD

படத்தின் கதைக்களம் :

சாதாரண கூலி வேலை செய்து வரும் புஷ்பா ஒரு நாள் செம்மரக் கடத்தல் தொழிலுக்கு கூலி வேலைக்கு செல்கிறார். அப்போது திடீரென போலீசார் செம்மர கட்டைகளை பாதுகாத்து கடைசியில் அவர் போலீசில் சரணடைகிறார். பின்னர் செம்மரக்கடத்தல் தலைவர்களில் ஒருவரான கொண்டா ரெட்டி புஷ்பாவை வெளியில் எடுக்க அவருடன் சேர்ந்து தொழிலை நடத்துகிறார் புஷ்பா.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..

மீண்டும் ஒருமுறை போலீஸ் சாதனையின் போது இவர் செம்மர கட்டைகளை தன்னுடைய மூளையை பயன்படுத்தி பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுகிறார். இதனால் அரசியல்வாதியான மங்கலம் சீனு அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக மாறுகிறார்.

பிறகு ஒரு கட்டத்தில் யாரிடமும் வேலை செய்யாமல் தனியாக தொழில் தொடங்க முடிவு செய்து நேரடியாக செம்மரக்கட்டைகளை வாங்குபவர்களிடம் டீல் பேசுகிறார் புஷ்பா. இதனால் இவரை தீர்த்துக்கட்ட மங்கலம் சீனு முடிவு செய்கிறார். ஆனால் கொண்டா ரெட்டியின் ஆட்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த புஷ்பா மங்கலம் சீனுவின் மனைவியின் தம்பியை கொன்று விடுகிறார். அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு சூப்பர். மாசான சண்டைக்காட்சி, நகைச்சுவை காட்சி என இரண்டிலும் திறம்பட நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா அழகான நடிப்பை கொடுத்துள்ளார். வில்லன்களாக நடித்து உள்ளவர்களின் நடிக்கும் பாராட்டுக்குரியது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.

இயக்கம் :

படத்தை அழகான கோர்வையாக கொண்டு சென்றுள்ளார். ஆனால் நேரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

  1. 1. நடிகர் மற்றும் நடிகைகள் நடிப்பு
  2. 2. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும்
  3. 3. சமந்தா ஆகியோர் நடனம்.
  4. 4. ஒளிப்பதிவு
  5. 5. தேவி ஸ்ரீபிரசாத் இசை

தம்ப்ஸ் டவுன் :

  1. 1. படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.
  2. 2. ஓவர் பில்டப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது.
REVIEW OVERVIEW
புஷ்பா விமர்சனம்
pushpa-movie-reviewமொத்தத்தில் புஷ்பா திரைப்படம் ஓவர் பில்டப்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் நல்ல ஆக்ஷன் திரைப்படம்.