purananooru movie latest update
purananooru movie latest update

புறநானூறு படத்தில் ஹீரோயின் மற்றும் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான் ஆனால் கால் ஷீட் பிரச்சனையால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் ஹீரோயின் ஆக ஸ்ரீலீலா நடிக்கப் போவதாகவும் வில்லன் கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.