தான் இறந்த பிறகும் நான்கு பேர் மூலமாக இந்த உலகை பார்த்துக் கொண்டிருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்.

Puneeth Rajkumar Helps After Died : கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரிலுள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் களத்தில் பார்க்கலாம் : யுவராஜ் சிங் அதிரடி அறிவிப்பு

இறந்த பிறகும் நான்கு பேர் மூலமாக உயிர்வாழும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் - அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இருக்கும் போதும் இவர் யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவியுள்ளார். 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களை படிக்க வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார்.

Bigil & Kaithi பட மோதல் குறித்து மேடையில் பேசிய இசையமைப்பாளர் Sam C.S | Enemy Press Meet

இருக்கும் போது யாருக்கும் தெரியாமல் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் அவருடைய சமூக சேவையை நிறுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவர் கண் தானம் செய்துவிட்டு இறந்துள்ளார். அவருடைய கண்ணின் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

இதன்மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பின்னரும் தன்னுடைய கண்களின் மூலமாக இந்த உலகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் அவரின் மனதை பாராட்டி கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு நல்ல மனம் கொண்ட மனிதரை கடவுள் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டார் எனவும் வருத்தப்படுகின்றனர்.