ரஜினிகாந்த்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நிகழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் புகழ்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது விஜய் டிவி புகழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார் அது குறித்த பதிவில், ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில் அவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர் அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.