ரூல்ஸை மாற்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர் ஒருவரை உள்ளே அனுப்ப இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Pugazh Participate in Bigg Boss Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ளது. இந்த ஐந்து சீசனிலும் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

ரூல்ஸை மாற்றிய விஜய் டிவி.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய போட்டியாளர் - பாவம் இவரு.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்க இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

ரூல்ஸை மாற்றிய விஜய் டிவி.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய போட்டியாளர் - பாவம் இவரு.!!

இதுவரை இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அபிராமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இன்னும் பல பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

இந்த நிலையில் எந்த ஒரு சீசனிலும் பங்கேற்காத போட்டியாளராக குக் வித் கோமாளி புகழ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய விவரங்களை அறிந்த பழைய போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்க உள்ள நிலையில் அவர்கள் பல யுக்திகளோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஆனால் இது பற்றி எந்தவித அனுபவமில்லாத புகழ் இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நிறைய பேரு என்ன கேலி பண்னாங்க – மேடையில் உருக்கமாக பேசிய Ashwin! | Cook with Comali | HD

மேலும் உண்மையில் புகழ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பதும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.