Pugazh Answer to Bala Fan

புகழ் கார் வாங்கிட்டாரு ஆனால் பாலா இன்னும் வாங்கலையே என ரசிகர் ஒருவர் பதிவிட்டதற்கு புகழ் பதிலளித்துள்ளார்.

Pugazh Answer to Bala Fan : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி காமெடியனாக வலம் வந்தவர் புகழ். பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்துள்ளார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் சந்தானத்துடன் ஒரு திரைப்படம் என சில படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

புகழ் கார் வாங்கிட்டாரு.. ஆனால் பாலா?? ரசிகரின் பதிவுக்கு புகழ் கொடுத்த தரமான பதில்.!!

தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறி வரும் புகழ் சமீபத்தில் தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். தன்னுடைய புதிய காரில் இருந்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகார் வாங்கிட்டாரு ஆனால் பாலா இன்னும் வாங்கலையே என பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவிற்கு பதிலளித்த புகழ் இதே பாலாவோட காரும் தான். நான் வேற வேற வேற இல்ல ரெண்டு பேரும் ஒன்னு தான் எனக் கூறியுள்ளார்.

புகழ் மற்றும் பாலாவிற்கு இடையே இருக்கும் இந்த நட்பு பலரையும் வியக்க வைத்துள்ளது. புகழின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புகழ் தான் வளர்ந்து வரும் நேரத்தில் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்பை எடுத்து பேசிய போது கிண்டியில் ஒரு இடத்திற்கு வரச் சொன்னார்கள். அந்த இடத்திற்குப் போய் எனக்கு கால் வந்த நம்பருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என வந்தது.

அங்கிருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். நான் நிகழ்ச்சிகளில் தான் கோமாளி ரியல் வாழ்க்கையில் இல்லை என நம்பி ஏமார்ந்தது குறித்து உருக்கமாக பேசி இருந்தார்.