PubG Movie Update : Dha Dha 87 Movie Director's Next Project | Vijay Sri Ji | Aishwarya Dutta | Kollywood Cinema news | Tamil Cinema News
தாதா 87, பிட்ரூ படங்களின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் அடுத்த புதிய படம் பப்ஜி.

PubG Movie : பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார்.

ஜூலியும் தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி ஐந்து பேர் ஒரு கேம் விளையாடுறார்கள். இறுதியில் ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது என்ன பரிசு? அதனால் அவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் கதை என கூறியுள்ளார்.

இந்த திரையுலகில் தொடர்ந்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. விஜய் ஸ்ரீ ஏற்கனவே 87 வயதான சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களை தாதா 87 படத்தில் நடிக்க வைத்தார்.

மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படத்தையும் இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம் பப்ஜியை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Dutta
Aishwarya Dutta
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.