Pubg Movie Release Update

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தை OTT வழியாக வெளிவிட கடும் போட்டி நிலவி வருகிறது.

Pubg Movie Release Update : தமிழ் சினிமாவின் 70 வயதான சாருஹாசன் ஹீரோவாக வைத்து படம் இயக்கி வெளியிட்டு வெற்றி கண்டவர் விஜய் ஸ்ரீ ஜி.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் புதுமுக நடிகைகள் என பலரை வைத்து பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமனன் நடித்துள்ளார். ஹீரோ அர்ஜுமனன் விக்ரம் குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த படத்தை OTT-ல் வெளியிட பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் படக்குழு இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவார்களா? அல்லது பட ரிலீஸுக்கு OTT தளத்தை தேர்வு செய்வார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.