PT Selvakumar Support to Delhi Formers

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சைக்கிள் பேரணியை நடத்தி உள்ளது பிடி செல்வகுமார் அவர்களின் கலப்பை மக்கள் இயக்கம்.

PT Selvakumar Support to Delhi Formers : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் IAS மக்கள் பாதை இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.அவர்களுக்கு நெல்லை மாவட்ட எல்லையில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி சால்வை அணிவித்து பேசியதாவது…

தமிழகத்தின் முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பாரத பிரதமர் மோடி அவர்களும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள். நாட்டின் முதுகெலும்பு என்று போற்றப்படும் விவசாயிகள் இவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் என்றால் அதை சாதாரணமாக அரசு எண்ணக் கூடாது. உலக போராட்ட வரலாற்றில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம், இப்படி எதுவுமே இல்லாமல் போராட்ட களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அவர்கள், விவசாயிகளின் நியாயமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கோதுமை, நெல் தானியங்களை வழங்கும் விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்திக்க வேண்டி வரும். ஆகவே எந்தவித சமரசமும் இன்றி அவர்களது கோரிக்கை நிறைவேற்ற பட வேண்டும். நமக்கெல்லாம் சோறு தந்த சகோதரர்கள் வெயில் மற்றும் பனியில் பசியோடு போராடுகிறார்கள். அவர்களுக்காக அனைவரும் ஆதரவளிப்போம். ஆட்சி, அதிகாரம், பணபலம், படைபலம் இவைகளை ஏவி விவசாயிகளை பணிய வைக்க முடியாது. விவசாயிகள் வெற்றி அடைந்தே தீருவார்கள். குமரியில் தொடங்கியிருக்கும் ஐயா சகாயம் அவர்களின் சைக்கிள் பேரணி வெற்றி பெறட்டும். இவ்வாறு பி.டி.செல்வகுமார் பேசினார்.

இந்த சைக்கிள் பேரணியில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், நெல்லை, குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிக்கேல் , துணைத்தலைவர் ஜெபர்சன் , இணையதள பொறுப்பாளர்கள் கார்த்திக்ராஜா, ஜெகதீஸ், ரூபன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.