PT Selvakumar Next Contribution Details
PT Selvakumar Next Contribution Details

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் துணிச்சலாக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

PT Selvakumar Next Contribution Details : கேளம்பாக்கத்தில் மே 1தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. தன் கணவனின் குடிபழக்கத்தால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி பேசும் போது… இப்போதுதான் நானும் என் பிள்ளைகளும் நிம்மதியாக உள்ளோம். டாஸ்மாக் மூடப்பட்டதால் கணவர் குடிக்காமல் இருக்கிறார் வருமானம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறோம். இக்கட்டான இந்த நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் செய்த உதவி மறக்க முடியாது என கண்ணீர் மல்க கூறினார்.

250 அரசி மூட்டைகள் பர்மா அகதிகளுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி – புகைப்படங்களுடன் இதோ.!

கலப்பை மக்கள் இயக்க தலைவர் திரு.P.T.செல்வகுமார் பேசியதாவது இந்த லாக்டவுன் காலகட்டத்தில் எப்படி டாஸ்மாக் மூடப்பட்டு உள்ளதா இதே நிலை தொடர வேண்டும். அணைகள் கட்டி எப்படி காமராஜர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தாரோ, அதே போல் சத்துணவு திட்டத்தை தந்த எம் ஜி ஆர், மகளிர் சுய உதவி குழுக்களை செயல்படுத்திய கலைஞர், அம்மா உணவங்களை தந்த ஜெயலலிதா மேற்கண்ட முதல்வர்கள் சரித்திரத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே போல இன்றைய முதல்வராகிய தாங்களும் மக்கள் மனதில் இடம் பெற டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும். இன்றைய சூழலில் ஒட்டு மொத்த தமிழக மக்களும் டாஸ்மாக் கடைகள் மூடியதில் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எல்லோரின் ௭ண்ணம்.

அரசாங்கம் நினைத்தால் டாஸ்மாக் இல்லாமல் செயல்படமுடியும் என்று நிருபித்துகாட்டி விட்டீர்கள்.இதற்கு குடிமகன்களும் தயாராகி விட்டார்கள். தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லை,மாணவர்கள் நிம்மதியாக படிக்கிறார்கள்.தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டால் தமிழக வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

விழாக்களாக இருந்தாலும் சரி துக்க துயர நிகழ்வு என்றாலும் சரி பெண்கள் முதல் பள்ளி மாணவர்களை கூட இந்த குடி விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு மது பாட்டில்களிலும் “குடி குடியை கெடுக்கும் “என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது.ஆகவே குடியை கெடுக்கும் மது எனும் அரக்கனை ஒழித்து ஒவ்வொருவர் வாழ்கையிலும் விளக்கேற்றுங்கள். என்று கலப்பை மக்கள் இயக்க தலைவர் P.T.செல்வகுமார் பேசினார். இந்த நிகழ்வில் கலப்பை மாநில ஒருகிணைப்பாளர் V.K.வெங்கடேசன்,லீ பேலஸ் கார்த்திக் சமூக ஆர்வலர் வேந்தரசி மற்றும் பாரதி, ஆட்டோ ஒட்டுனர் சங்க செயலாளர் மீனாட்சி கலந்து கொண்டனர்..காய்கறி பைகளை இரஜகை G.J.செல்வதாஸ் வழங்கினார்.

இந்த நிகழ்வில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.