வாள்வீச்சு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பேசியுள்ளார் பி. டி செல்வகுமார்.

PT Selvakumar in Vaal Veechu Program : பொட்டல்குளம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர். விழாவில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லிங்கேசன் தலைமை தாங்கினார்.

வாள்வீச்சு கலை அபாரமான கலை.. வாள் வீச்சு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பேசிய பி டி செல்வகுமார்.!!

கே கே டி நிறுவனர் அமிர்தராஜ் ராஜேஷ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பிபிகே சிந்து குமார் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார் போட்டிகளை தொடங்கி வைத்து அவர் பேசும் பொழுது “வாள் வீச்சு கலை என்பது மிகவும் அபாரமான கலை !பண்டைய காலத்தில் நமது நாட்டில் அரசர்களிடம் வாள் மட்டுமே மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது. வாள்வீச்சில் ஆண்களும் பெண்களும் வீரத்துடன் விளங்கினார்கள்.

வாள்வீச்சு கலை அபாரமான கலை.. வாள் வீச்சு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பேசிய பி டி செல்வகுமார்.!!

வாள்வீச்சு செய்வதன் மூலம் மனோதிடத்தை யும் வலிமையும் அதிகரிக்கலாம். இப்போட்டியில் பல்வேறு இடங்களில் இருந்து இங்கே இளைஞர்கள் சிறுவர்-சிறுமிகள் வந்துள்ளீர்கள். உங்களது திறமைகளுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் தேசிய அளவிலான ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கு பெற்று பதக்கங்களை வெல்ல வேண்டும்! தமிழக அரசு இந்த மாதிரியான விளையாட்டு போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து தமிழ்நாடு விளையாட்டுப்போட்டிகளில் மிகச் சிறந்த மாநிலமாக மாற்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

வாள்வீச்சு கலை அபாரமான கலை.. வாள் வீச்சு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பேசிய பி டி செல்வகுமார்.!!

அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா ஆண்டிரஸ், 14வது வார்டு பெருந்தலைவர் பொன்னுலிங்கம், 13வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீகிருஷ்ணன், டாக்டர் சுஜித், தலைமை பயிற்சியாளர் டேவிட் ராஜ், ஆன்டனி,சந்தியா மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் வர்த்தக அணி தலைவர் விஸ்வ சந்திரன் ,ஜோசப் கென்னடி டிவிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளியும் சங்கேஷ் பென்சிங் கிளப்பும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்