YouTube video

புகைப்பட கலைஞர்களுக்கு உதவிய கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT.செல்வகுமார்!

PT Selvakumar Helps to photographer : இன்று 50 வது நாளை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் பிரமாண்டமாக புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் 140 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது : கிட்டதட்ட அறுபது நாட்கள் கடந்து விட்டது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எல்லோருமே விலகி இரு என்று சொல்லி கொண்டே இருக்கிறோம். இனியாவது இணைந்து உதவி செய்திடு என்று சொல்வோம். நிறைய பேர் தொழில் செய்ய முடியாமல் பல நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

புகைப்பட கலைஞர்கள் இன்று நம்முடைய வாழ்வில் மிக முக்கியமானவர்கள்.

நம்முடைய பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களிலும் நம்முடைய புகைப்படம் இருப்பதற்கு காரணம் அவர்கள் தான். திருமணம், திருவிழா போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு துணை நின்றவர்கள்.

இன்று அவர்களுடைய வாழ்வாதாரம் இழந்து பொலிவிழந்து நிற்கிறார்கள். எந்த ஒரு கலைஞனும் தனக்கு உதவி வேண்டும் என்று கேட்கமாட்டான்.

நம்மை அழகாக காட்டும் கலைஞர்களுக்கு அரசு கண்டிப்பாக உதவ வேண்டும், இல்லையென்றால் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்.

அரசியல் வாதிகள் காமராஜரிடம் பாடம் கற்க வேண்டும்!

இன்று உலகில் சிறந்த நேர்மையானவர்களின் 50 பேர் பட்டியலில் முதல் இடத்தில் காமராஜர் இருக்கிறார், அவர் கட்டிய அணைகள், அவர் கட்டிய பள்ளிக்கூடங்கள், அவர் தந்த மின்சாரங்கள், அவர் தந்த தொழில்கள் இன்றும் தமிழகத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு தலைவரும் அவரை பார்த்து கற்று கொள்ள வேண்டும். அரசியல் வியாபாரிகளாலும் சில கபட அரசியல்வாதிகளாலும் அவருடைய தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் உலகில் 50 நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் காமராஜர் இருக்கிறார் என்று அமெரிக்க சொல்கிறது.

பணம் பணம் என்று அலையும் அரசியல்வாதிகளுக்கு காமராஜரின் நேர்மை ஒரு பாடமாக மாறட்டும். பணத்தை விட மக்கள் சேவையே புனிதமானது என்பது நிரூபணமாகியுள்ளது.

கோரிக்கையை ஏற்று குரல் கொடுத்து விட்டீர்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்த PT செல்வகுமார்!

அவருடைய தியாகத்தை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கொண்டாட வேண்டும் என்று பேசினார்.

புகைப்படக் கலைஞர்களுக்கு நலவாரியம்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது : கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்களுக்காக 50 வது நாள் பணியில் ஈடுபட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு மேல் உதவி செய்து இவ்வளவு ஒருங்கிணைப்பாக கொண்டு வருவது மிக பெரிய விஷயம்.

கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் இவ்வளவு துணிச்சலாக களத்தில் இறங்கி உதவி செய்வது பாராட்டப்பட வேண்டியது. பெரும் பணமுதலாளிகளே வெளியில் வர பயந்து பதுங்கு குழிக்குள் இருக்கிறார்கள்.

கஜா, ஒக்கி புயல் நேரத்தில் இருந்தே தேடி சென்று உதவி செய்து வருகிறார்கள் ஏழை எளிய மக்களுக்காக நடுநிலையோடு குரல் கொடுப்பவர் PT செல்வகுமார்.

அவருக்கு தன்னலமற்ற பெரும் படையே இருப்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையிலே கலப்பை மக்கள் இயக்கத்தை மனதார வாழ்த்துகிறேன். கலப்பை என்னுடைய இயக்கம், அவர்கள் எப்போது கூப்பிட்டாலும் வருவேன்.

புகைப்படக் கலைஞர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நலவாரியம் அமைத்து அரசு உதவ வேண்டும் என்று இமான் அண்ணாச்சி பேசினார்.

இந்த நிகழ்வில் அரிசி வழங்குவதற்கு உதவிய சைக்கோ தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் மற்றும் காய்கறி வழங்குவதற்கு உதவிய செட்டிகுளம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.