காமராஜர் பிறந்த நாளில் கூழ் விற்கும் மாணவி பிருந்தா மற்றும் கூலி வேலை பார்க்கும் மாணவி அபிதாவுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஸ்கூட்டி வழங்கினார்!

PT Selvakumar Helps in Kamaraj Birthday : 119-வருட காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு , மைலாடியில் தந்தையை இழந்து, கேன்சரில் தவிக்கும் தாய், குடும்ப சூழலால் கூழ் விற்கும் மாணவி பிருந்தாவிற்கும், கனகப்பபுரத்தை சேர்ந்த படுக்கையில் தந்தை, மனநிலை பாதிக்க பட்ட தாய், குடும்ப சூழலால் கூலி வேலை செய்யும் மாணவி அபிதாவிற்கும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இலவசமாக கல்வி கற்க உதவியதோடு இலவசமாக ஸ்கூட்டி வழங்கினார்.

10 ஏழை மாணவிகளுக்கு என்ஜினியரிங் படிக்க உதவி

ஆதரவற்ற ஏழை மாணவிகள் பத்து பேருக்கு இந்த வருடம் என்ஜினியரிங் படிக்க உதவினார். அரசு பள்ளி மாணவர்கள் 150 பேருக்கு டிபன் கேரியரும், அரசு ஆசிரியர்கள் 30 பேருக்கு கலப்பை விருதும், பரிசும், அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

பெற்றோர் சங்க தலைவர் லயன் செல்வராஜ் பேசும்போது.. ஏழை மக்களின் நாடி நரம்புகளோடு ஒன்றிணைந்து செயல்படுகிறார் பி.டி.செல்வகுமார். கடந்த கொரோனா காலங்களில் இவரது செயல்கள் இந்தியா முழுக்க பேசப்பட்டது. பல வசதி படைத்தவர்களும், தலைவர்களும் சிலைகளுக்கு மாலை போடுவதோடு நிறுத்தி கொள்வார்கள். ஆனால் பி.டி.செல்வகுமார் காமராஜரின் உண்மை தொண்டனாக இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏழை மாணவிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிகள், ஜேம்ஸ்டவுன் வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறார். நிறைய ஆலயங்கள் கட்டி கொடுத்திருக்கிறார். அவரது செயல்பாடுகள் கலியுக கர்ணனாகவே எங்களுக்கு தெரிகிறது. இன்றைய தினம் ஏழை மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கியுள்ளார். எனக்கு தெரிந்து தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு உதவியை யாரும் செய்து இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆதரவற்ற மாணவிகளின் கல்விக்கு உதவுவதால் அந்த குடும்பம் மேன்மையடையும். காமராஜர் ஏழைகளுக்காக வாழ்ந்தது போல் வசதி படைத்தவர்கள் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு உதவுங்கள் குறிப்பாக ஏழை பெண்களின் கல்விக்கு உதவுங்கள் என்று பி.டி.செல்வகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்த வருடம் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழாவில் இந்த நிகழ்வே பல மாணவிகளின் கல்வி கனவுகளுக்கு உயிரூட்டியதோடு மனதை நெகிழ வைக்கும் நிகழ்வாகவும் இருந்தது என அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இந்த விழாவில் வாரியூர் அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர்,தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா, அன்னை வேளாங்கண்ணி சேயர்மென் பீட்டர் ஏசுதாஸ், எல்.எம்.எஸ். பள்ளி தாளாளர் சுரேஷ் குமார்,கலப்பை மகளிரணி தலைவி ரெங்கநாயகி,சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன்,மற்றும் ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.