Psycho Trailer
சைக்கோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு, ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ட்ரைலரில் டயலாக்கே இல்லாமல் வெறும் பியானோ இசை மட்டுமே வருகிறது.

காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை அப்படியே பயத்தில் உறைய வைக்கின்றன. தமிழ் சினிமாவில் ராட்சசன் படத்திற்கு பிறகு மிரள வைக்கும் திரில்லர் படமாக சைக்கோ இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.