மிஸ்கின் இயக்கத்தில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ.
படத்தின் கதைகளம் :
கண் பார்வையற்ற மாற்று திறனாளியாக நடித்துள்ள உதயநிதி அதிதி ராவை காதலிக்கிறார். தன்னுடைய காதலை நிரூபிக்கும் தருணத்தில் அதிதி ராவ் சைக்கோவால் கடத்தப்படுகிறார்.
அதன் பின்னர் என்ன நடக்கிறது? பார்வையற்ற உதயநிதி காதலியை எப்படி மீட்கிறார் என்பதே இப்படத்தின் திகில் கலந்த கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
உதயநிதி கவுதம் என்ற கதாபாத்திரத்தில் பார்வையற்றவராக நடித்து நம்மை சிலிர்க்க வைக்கிறார். லவ், எமோஷன் என அனைத்திலும் அசத்தியுள்ளார்.
அதிதி ராவ் உதயநிதியின் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். நித்யா மேனன் உதயநிதிக்கு உறுதுணையாக படம் முழுக்க வலம் வரும் வேடத்தில் பக்காவாக நடித்துள்ளார்.
சிங்கம் புலி, இயக்குனர் ராம் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர். சைக்கோவாக மிரட்டியுள்ளார் ராஜ்குமார். அவருடைய பார்வையே நம்மை பயமுறுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
தொழில்நுட்பம் :
இசை :
இளையராஜாவின் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. இவரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். வசனங்கள் குறைவு தான் என்றாலும் இவரின் இசை சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லி விடுகிறது.
பாடல்கள் பிரமாதம்.
ஒளிப்பதிவு :
PC ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவு அற்புதம், ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மிரள வைக்கிறார்.
இயக்கம் :
மிஸ்கின் முற்றிலும் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அவரை சிறப்பாக செய்துள்ளார். படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது நமக்கே ஒரு பயம் வருவது தான் படத்தின் வெற்றி. அதை சரியாக செய்துள்ளார் மிஸ்கின்.
தம்ப்ஸ் அப் :
1. கதைக்களம்
2. இசை
3. உதயநிதி, ராஜ்குமாரின் நடிப்பு
4. ஒளிப்பதிவு
தம்ப்ஸ் டவுன் :
குறை என பெரிய அளவில் ஒன்றும் இல்லை.
இதயம் பலவீனமானவர்கள் படத்தை தவிர்ப்பது நல்லது.