Psycho Movie Screens
சைக்கோ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் தர்பார், பட்டாஸ் திரையிடபட்டு வந்த தியேட்டர்களும் படத்தை தூக்கி விட்டு சைக்கோவை திரையிட தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் மூலமாக அருள் மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சைக்கோ திரில்லர் படமாக இப்படத்தை மிஸ்கின் ராவாக பயங்கர த்ரில்லராக படமாக்கியுள்ளார், இதனால் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக படம் வெளியான நேற்றே பல தியேட்டர்களில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. சத்யம், மாயாஜால் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களில் கிட்டத்தட்ட 30-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

மேலும் இன்று தர்பார், பட்டாஸ் போன்ற கடந்த வார படங்கள் திரையிட்டு வந்த தியேட்டர்களும் சைக்கோ படத்திற்கு தாவியுள்ளனர். இதனால் ஒரே நாளில் சைக்கோ படத்திற்கு கிட்டத்தட்ட 50 தியேட்டர்கள் உயர்ந்துள்ளன.

இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூலும் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.