வீரா ராஜவீரா பாடலின் லிரிக்ஸ் வீடியோ ரிலீஸ் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தின. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல மொழிகளில் இம்மாதம் வரும் 28ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அகநக பாடலை தொடர்ந்து வீரா ராஜவீரா என்னும் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக நேற்றைய தினம் படக்குழு தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.