பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியன் செல்வன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 29ஆம் தேதியான நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் நாளை வெளியாக இருக்கும் ட்ரெய்லரில் என்ன வரப்போகிறது என்பது குறித்து ஸ்பெஷலான கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.