PS2 இசை வெளியீட்டு விழாவில் அழகு தேவதையாக வளம் வந்த த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயினியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் PS2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோலாகலமாக நடை பெற்றதை தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் அழகு தேவதையாக கலந்து கொண்டு இருந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.