பூங்குழலியின் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தின. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் இம்மாதம் 28ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் இப்படத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்த பூங்குழலியின் கதாபாத்திரம் உருவான விதத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.