பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாபெரும் நட்சத்திர பட்டாளங்களில் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வரும் இப்படத்தின் படக்குழு தற்போது முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2′ என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்ததை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் 4DX தொழில்நுட்பத்திலும் வெளியாக இருப்பதால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.