பொன்னியன் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக 450 கோடி ரூபாயை ஈட்டி உள்ளதாக அதிகாரபூர்வமான தகவலை படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் தற்போது ரூ.450 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

450 கோடி வசூலை ஈட்டிய பொன்னியின் செல்வம்!!.. அதிகாரபூர்வமான அறிவிப்பு வைரல்!.

தற்போது இந்த மகிழ்ச்சியான பதிவை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் twitter பக்கத்தில் சற்று முன்பு அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்துள்ள படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன்1 திரைப்படம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.