பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சோழ சோழ பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

பொன்னியின் செல்வனின் சோழா சோழா பாடல் வீடியோ!!… இணையத்தில் வைரல்!.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடியை வசூல் செய்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்தில் 200 கோடியை வசூலித்த முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வனின் சோழா சோழா பாடல் வீடியோ!!… இணையத்தில் வைரல்!.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரசகர்களின் ஃபேவரிட் பாடலான சோழ சோழ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.