முதல்வரை தரக்குறைவாக விமர்சித்த ஆ ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest Against to A Rasa : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கான நாள் நெருங்கி கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் பழனிசாமி அவர்கள் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தினமும் மாவட்டம் மாவட்டமாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

முதல்வரை தரக்குறைவாக விமர்சித்த ஆ ராசா.. தமிழகம் முழுவதும் பெண்கள் அமைப்பினர் ஆர்பாட்டம்.!!

மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் எதிர் கட்சியான திமுகவினர் அரசியல் மாண்பு இல்லாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிலும் ஆ ராசா தொடர்ந்து முதல்வரை தரக்குறைவாக பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் நல்ல உறவில் பிறந்தவர் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக எம்.பி கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கூட இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். பெண்கள் அமைப்பினர், அதிமுகவினர் ஆகியோர் ஆ ராசாவை கண்டித்து வந்தனர்.

இப்படியான நிலையில் இன்று சென்னை, திருச்சி, சேலம், எடப்பாடி என பெரும்பாலான இடங்களில் பெண்கள் அமைப்பினர் ஆ ராசாவை கண்டித்தும் அவரை கைது செய்ய கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.