வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் ப்ரொமோஷன் வீடியோ வைரல்.

தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக உள்ளது.

மெட்ரோ டிரெயினில்… மாஸ் காட்டும் தளபதியின் வாரிசு!!… கலக்கலான ப்ரமோஷன் வீடியோ வைரல்.!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வழங்க உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளும் வேற லெவலில் தொடங்கியுள்ளது.

மெட்ரோ டிரெயினில்… மாஸ் காட்டும் தளபதியின் வாரிசு!!… கலக்கலான ப்ரமோஷன் வீடியோ வைரல்.!

அதன்படி வாரிசு படத்தின் ப்ரோமோஷனாக சென்னையில் மெட்ரோ ரயிலில் தளபதியின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை இப்படத்தை வழங்க இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. அது தற்போது தளபதியின் ரசிகர்களின் இடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.