தனுஷ், கார்த்திக் நரேன் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனுஷ் 43 படத்திலிருந்து கார்த்திக் நெருங்கி வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Production Company Clarification About Dhanush43 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இந்த நிலையில் இதற்கு தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதன் காரணமாக இந்த படத்திலிருந்து கார்த்திக் நரேன் விலகிக் கொண்டதாக தகவல் வெளியானது.

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் மோதல் : வெல்லும் அணி எது?

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கார்த்திக் நரேன் விலகிக் கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. தற்போது தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர் என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பட பூஜையில் Anchor-யை கலாய்த்த Cook With Comali Pugazh! | Enna Solla Pogirai Movie Pooja