Producer Xavier Britto About Master Release
Producer Xavier Britto About Master Release

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் பிரிட்டோ.

Producer Xavier Britto About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சாத்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா, வர்ஷா பொல்லாமா, தீனா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

மேலும் இப்படம் OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆனால் படக்குழு மாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதி அளித்தது.

சியான் 60 படத்திற்காக புதிய கெட்டப்பில் துருவ் விக்ரம் – செம மாஸ் லுக்

தற்போது தயாரிப்பாளர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதையே தான் கூறியுள்ளார். எவ்வளவு நாட்கள் ஆனாலும் தியேட்டர்கள் திறந்த பின்னர் தான் மாஸ்டர் படம் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக விஜய்க்கு ரூபாய் 100 கோடி வரை சம்பளம் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை குறைக்கும் படி சன் பிக்சர்ஸ் கேட்டதற்கு அதற்கு விஜய் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.