மாநாடு எப்படி வந்துள்ளது..? தயாரிப்பாளர் Suresh Kamatchi தந்த Mass Update.!
suresh kamatchi

Watch Video – Producer Suresh Kamatchi Opens Up About Maanaadu Movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இருக்கிறார்.

படத்தில் நடிக்க பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தொடர்ந்து படம் குறித்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

மாநாடு எப்படி வந்துள்ளது..? தயாரிப்பாளர் Suresh Kamatchi தந்த Mass Update.!

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிம்பு வெங்கட் பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.