YouTube video

Producer Suresh Kamatchi Opens Up About Maanaadu Movie Shooting

Simbu’s Dropped Movies List : சிம்பு பொதுவாக சூட்டிங்கிற்கு சரியாக வரமாட்டார், சொன்னபடி படத்தை முடித்துக் கொடுக்க மாட்டார்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இவர் நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் ஆகியுள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கெட்டவன் :இயக்குனர் நந்து இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் கெட்டவன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் டிராப் ஆனது.

ஏசி : எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூ படத்திற்கு பிறகு அவர் ஏசி என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் பாட்டில் சிம்புவும் அசினும் இணைந்து நடிக்க இருந்தனர். ஆனால் இதுவும் கைவிடப்பட்டது.

வாலிபன் :2010 ஆம் ஆண்டில் சிம்பு வாலிபன் என்ற படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்படமும் கைவிடப்பட்டது.

வேட்டை மன்னன் :லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டை. முதலில் இப்படத்தில் சிம்பு தான் நடிக்க இருந்தார். அவர் தொடர்ந்து காலதாமதம் செய்து கொண்டே இருந்ததால் ஆர்யாவை வைத்து படத்தை இயக்கினார் லிங்குசாமி.

இதனால் சிம்பு வேட்டை மன்னன் என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்புகள் பாதி வரை சென்றன. அதன் பின்னர் டிராப் ஆனது. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் தான் இயக்கினார். அவரின் முதல் படமாக உருவாகி இருந்தது வேட்டை மன்னன் திரைப்படம் தான்.

கான் :செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது. ஆனால் கடைசியில் படம்.

மகா மாநாடு :சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இது படம் கைவிடப்பட்டதாக அறிவித்த போது சிம்பு மகா மாநாடு என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.அதிகமான பட்ஜெட்டில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்ததோடு சரி அடுத்து எந்த அப்டேட் வெளிவரவில்லை.

இது மட்டுமில்லாமல் கோ படத்தில் ஜீவாவுக்கு பதில் சிம்பு தான் நடிக்க இருந்தார். ஹீரோயினை மாற்றங்கள் என சிம்பு கூற இயக்குனர் ஹீரோவையே மாற்றி விட்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை திரைப்படம் சிம்புக்காக உருவானது தான் அதையும் சிம்பு தவற விட்டார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.