Producer Siva Sakthi Pandian About Ajith Movies
Producer Siva Sakthi Pandian About Ajith Movies

விஜய் நடிக்க மறுத்ததால் அஜித் காசு வாங்காமல் நடித்துக் கொடுத்து அந்த படத்தை ஹிட் ஆக்கியும் உள்ளார்.

Producer Siva Sakthi Pandian About Ajith Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வரும் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலத்தில் சிவசக்தி பாண்டியன் என்பவர் படங்களை விநியோகிக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்து விஜயிடம் கால்சீட் கேட்டு சென்றுள்ளார்.

ரஜினி படத்தில் விக்ரம் பட ரெஃபரன்ஸ்.. வெட்டி தூக்கிய படக்குழு – முதல் முறையாக வெளியான வீடியோ!

ஆனால் இயக்குனர் SAC ஒரு படத்தை தயாரித்து விட்டு பிறகு வா பார்க்கலாம். எப்படி விளம்பரம் செய்கிறார் எனப் பார்த்துவிட்டு விஜயை நடிக்க வைக்கலாமா வேண்டாமா என முடிவு செய்கிறேன்.

அதன் பிறகு இந்த படத்தில் அஜித் நடித்துள்ளார். அதுதான் வான்மதி திரைப்படம். இந்த படம் சுமாரான வரவேற்ப்பை தான் பெற்றது.

அதன் பிறகு சிவசக்தி பாண்டியன் இன்னொரு படத்தின் கதைக்காக விஜய்யுடன் சென்றுள்ளார். ஆனால் அப்போதும் விஜய் கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த படத்திலும் அஜித் அவர்களே நடித்துள்ளார். இந்தத் திரைப்படம்தான் காதல் கோட்டை. இந்தப் படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.