கஜினி படத்தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Producer Salem Chandrasekhar Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வெளியான கஜினி, சுள்ளான், பிப்ரவரி 14, சபரி, கில்லாடி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சேலம் சந்திரசேகர் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரை தொடர்ந்து நாளை நமதே, ஏணிப்படிகள், வீட்டுக்கு வீடு வாசப்படி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தேசிய விருது பெற்ற KS சேது மாதவன் தம்பி KSR மூர்த்தி சிவப்பதம் அடைந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.