Producer Dhanu About Vaadivasal

வாடி வாசல் திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Producer Dhanu About Vaadivasal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் சூர்யா. இவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் படம் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கலைப்புலி தாணு சில தகவல்களை கூறியுள்ளார். திரைப் பயணத்தில் எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு மைல்கல் தான். அசுரன் திரைப்படம் பாரதிராஜா கிழக்கு சீமையிலே திரைப்படம் கொடுத்த லாபத்தை விட பத்து மடங்கு கொடுத்தது.

அசுரனை மிஞ்சும் திரைப்படமாக வாடிவாசல் இருக்குமென கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார். வெற்றிமாறனின் கதைக்கும் கலை நயத்திற்கு அளவே இல்லை. அசுரனை விட 20 மடங்கு பேசும் படமாக வாடிவாசல் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வாடிவாசல் இந்திய சினிமாவையே உலுக்கும் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.