Dhananjayan
தயாரிப்பாளர் தனஞ்செயன் இனி இயக்குனராகவும் ஜொலிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தனஞ்செயன். எப்போதும் திரையுலகை நல்லவொரு புரிதலோடு பார்ப்பவர்.

இவர் தற்போது சஸ்பென்ஸ் திரில்லர் கதை ஒன்றை எழுதியுள்ளாராம். அதன் மூலமாக இயக்குனராக படம் இயக்க போவதாக அவரே சில புகைப்படங்களுடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் பட்டியல் வெகு விரைவில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனராகவும் வெற்றி பெற ரசிகர்களுடன் இணைந்து கலக்கல் சினிமாவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.