Producer Council Election Update
Producer Council Election Update

மீண்டும் அணியுடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட விஷால் முடிவு செய்துள்ளார்.

Producer Council Election Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் போட்டிக்காக நின்று வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வருகிறார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் நடைபெற உள்ள தேர்தலிலும் அதே அணியுடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.

விஜயை எதிர்க்க திட்டம் போடும் விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனம் – வெற்றி கிடைக்குமா?

ஏற்கனவே விஷால் மீது பல்வேறு தயாரிப்பாளர்கள் பலவிதமான குறைகளை கூறி வருகின்றனர். அதேசமயம் விஷாலுக்கு ஆதரவாக பல தயாரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷால் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.