திருட்டு வி.சி.டி

திருட்டு வி.சி.டி : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியீட்டுள்ள அறிக்கை – 24.10.2018

அதில் 23.10.2018 அன்று சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் முக்கியமாக திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் CCTV கேமரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்க்குள் பொருத்தபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. பொருத்தபட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி record செய்யபடும்.

4. வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் CCTV கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தபடுவர்.

6. ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.

7. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

8. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கபடும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Producer Council

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.