சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 27-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நாய்களை பயன்படுத்தி இருப்பதால் தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் பட ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனைகள் தீர்ந்து சொன்னபடி படம் ரிலீசாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது